என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சிய கதாநாயகி

என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சிய கதாநாயகி

படம்: ஊடகம்

20 Oct 2023 - 3:02 pm

1 mins read

முத்தக் காட்சியில் நடிக்க மறுத்த நடிகை மனிஷா யாதவ் மீது இயக்குநர் கோபத்தில் உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

‘நினைவெல்லாம் நீயடா’ என்ற படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார் ஆதிராஜன்.

இதில் மனிஷா நாயகியாகவும், பிரஜின் நாயகனாகவும் நடித்துள்ளனர்.

கதைப்படி இருவரும் காதலர்கள். ஒரு முக்கியமான தருணத்தில் நாயகிக்கு அவர் எதிர்பார்க்காதபோது நாயகன் முத்தமிடுவது போல் ஒரு காட்சியைப் படமாக்க திட்டமிட்டாராம் இயக்குநர்.

ஆனால் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் அக்காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார் மனிஷா.

“வேண்டுமானால் நாயகனின் கன்னத்தில் முத்தமிடுகிறேன். என்னை விட்டுவிடுங்கள்,” என்று கண்டிப்பாகவும் கெஞ்சலாகவும் மனீஷா கூறிவிட்டதால், இயக்குநர் ஏமாற்றமடைந்துள்ளார்.

பள்ளிப் பருவ காதலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்