தனது 31ஆவது பிறந்த நாளை தனக்கு நெருக்கமான திரையுலக நண்பர்களுடன் கொண்டாடி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீ, அவரது மனைவி பிரியா, நடிகர் கதிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விருந்தில் பங்கேற்றவர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்ட கீர்த்தி, அவற்றை தமது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
அவற்றைப் பரவலாகப் பகிர்ந்து வரும் ரசிகர்கள், மறக்காமல் கீர்த்திக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
‘மாமன்னன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘சைரன்’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘ரகு தாத்தா’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி. இரண்டு தெலுங்குப் படங்களும் இவரது கைவசம் உள்ளன.

