தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆபாசக் கண்ணோட்டம்: மெஹ்ரீன் வருத்தம்

1 mins read
18eb4d77-75d3-40f0-9f10-c515c03927ec
மெஹ்ரீன். - படம்: ஊடகம்

சில நேரங்களில் கதைக்கு தேவைப்படும் காட்சிகளில் நடிப்பது ஒரு நடிகையின் கடமை எனக் கருதுவதாக சொல்கிறார் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.

இவர் நடித்துள்ள ‘சுல்தான் ஆஃப் டெல்லி’ இணையத்தொடரில் இடம்பெற்றுள்ள பாலியல் வன்கொடுமை தொடர்பான காட்சிகள் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன.

அந்தக் காட்சிகள் ஆபாசமாக உள்ளதாக சமூக ஊடகங்களில் சிலர் கருத்து தெரிவித்திருப்பது தமக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறுகிறார் மெஹ்ரீன்.

“வன்கொடுமை தொடர்பான காட்சிகளை இப்படி ஆபாசமான கண்ணோட்டத்துடன் பார்ப்பது பெண்களுக்கு எதிரான வன்முறையை ஆதரிப்பது போல் உள்ளது.

“இந்த இணையத்தொடரை முழுமையாகப் பார்த்த பிறகு ஒவ்வொரு காட்சிக்கும் அளிக்கப்பட்டுள்ள நியாயமான முக்கியத்துவத்தை ரசிகர்களால் புரிந்துகொள்ள முடியும்,” என்று மெஹ்ரின் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்