‘மேன்ஷன் 24’ என்ற இணையத்தொடரில் சத்யராஜுடன் இணைந்து நடித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இத்தொடருக்கான விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், எப்போதுமே சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் தமது விருப்பம் என்றார்.
“இந்த இணையத்தொடரில் அப்படிப்பட்ட கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதில் தந்தையை தேடிச் செல்லும் மகளாக நடித்துள்ளேன்.
“பொதுவாக பேய் இருப்பதாக நான் நம்பியதில்லை. ஆனால் இந்த இணையத்தொடரில் நடித்த பிறகு எனக்குள் பயம் ஏற்பட்டு உள்ளது.
“இப்போதெல்லாம் இரவு நேரங்களில் பேய்ப் படங்களைப் பார்ப்பதில்லை. இந்தத் தொடரையும்கூட பகல் நேரத்தில்தான் பார்க்கிறேன்,” என்றார் வரலட்சுமி.