திருமணத்திற்குப் பிறகும் தமக்கான வாய்ப்புகள் தொடர்ந்து தேடி வருவதாகச் சொல்கிறார் காஜல் அகர்வால்.
தற்போது சங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் காஜல்.
தெலுங்கில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘பகவத் கேசரி’ என்ற படம் திரை கண்டுள்ளது.
இந்நிலையில், மூத்த நாயகர்களுடன் நடிப்பதில் தமக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை என்கிறார் காஜல்.
“கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தது இனிய அனுபவமாக அமைந்தது. தெலுங்கில் ‘சத்தியபாமா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக தற்போது நடித்து வருகிறேன்.
“மேலும், இரண்டு தெலுங்குப் படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளேன். இந்தியில் ‘உமா’ என்ற படத்திலும் நான்தான் கதாநாயகி,” என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் காஜல் அகர்வால்.

