பொறுப்பான தாய் நயன்தாரா

பொறுப்பான தாய் நயன்தாரா

1 mins read
9372f5ec-5783-4673-8b50-907112d5ee4f
குழந்தையுடன் நயன்தாரா. - படம்: ஊடகம்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்.

அந்த குழந்தைகளுக்கு ‘உயிர்’, ‘உலகம்’ என்று பொருள்படும் பெயர்களைச் சூட்டியுள்ள விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியர், அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தனது மகன் (உயிர்), தன் மடியில் படுத்து அயர்ந்து தூங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் நயன்தாரா.

இந்தப் படத்தை அவரது ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். மேலும் ‘பொறுப்பான தாய் நயன்தாரா’ என்றும் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்