தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதீப் ரங்கநாதன்: எதையும் வேண்டுமென்றே செய்வதில்லை

1 mins read
c689deff-df10-46be-bf79-8a215f1c5fa3
‘லவ் டுடே’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

நடிகர் தனுஷுடன் தம்மை ஒப்பிட வேண்டாம் என்கிறார் நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன்.

இவ்வாறு ஒப்பிட்டுப் பேசுவது தவறு என்று நினைப்பதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கோமாளி’, ‘லவ் டுடே’ படங்களை அடுத்து இன்னொரு படத்திலும் இவர் நாயகனாக நடிக்கிறார்.

தாம் பேசுவதும் நடிப்பதும் இதர செயல்பாடுகளும் தனுஷ் போல இருப்பதாகச் சொல்கிறார்கள். அது உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை.

“தனுஷ் மிக உயரத்தில் உள்ளார். நான் இப்போதுதான் திரைப் பயணத்தைத் தொடங்கி உள்ளேன்.

லவ் டுடே’ படத்தில் ‘மாமா குட்டி’ என்று ஒரு விஷயத்தைச் சொல்லி இருப்பேன்.

உண்மையிலேயே நம்மைச் சுற்றி நிறைய மாமா குட்டிகள் இருக்கிறார்கள். முன்னாள் நண்பர், தோழி இல்லாதவர்களே இப்போது கிடையாது. எனவே எல்லாருமே கிட்டத்தட்ட ‘மாமா குட்டி’கள்தான்,” என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

குறிப்புச் சொற்கள்