வெளியான முதல் நாளிலேயே அதிக வசூல் பெற்ற இந்தியப் படம் என்ற சாதனையைப் புரிந்துள்ளது ‘லியோ’.
இப்படம் முதல் நாளன்று உலக அளவில் ரூ.148.5 கோடி வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலும் பல்வேறு நாடுகளிலும் இப்படத்துக்கான திரையரங்க முன்பதிவு நன்றாக இருப்பதால் வசூல் ரீதியில் மேலும் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் தனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் விஜய்.
இதற்கிடையே, ‘லியோ’ படம் குறித்து சில தரப்பினர் எதிர்மறை விமர்சனங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அவற்றுக்குப் பதில் அளிக்க வேண்டாம் என விஜய் தரப்பு தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
“இதன் மூலம் அத்தகைய விமர்சனங்களுக்கு நாமே இலவச விளம்பரத்தைத் தேடித்தரக்கூடாது. அதேசமயம், நல்ல விமர்சனங்களை மட்டும் அனைத்துச் சமூக ஊடகங்களிலும் பரவலாகப் பகிருங்கள்,” என்றும் கூறப்பட்டுள்ளதாம்.

