பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் விரைவில் திரைகாண உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித்தொகுப்பு அடுத்த வாரம் வெளியாகிறது.
இத்தகவலைச் சமூக ஊடகம் வழி பகிர்ந்துள்ள பா.ரஞ்சித், இனி வரும் நாள்களில் இப்படம் குறித்த புதுத்தகவல்கள் தொடர்ந்து வெளிவரும் எனத் தெரிவித்துள்ளார்.
‘தங்கலான்’ படப்பிடிப்பு முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. இதில், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
எனினும் எப்போது வெளியாகும் என்பதற்கான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில், எதிர்வரும் பொங்கல் வேளையில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ‘தங்கலான்’ படத்தில் விக்ரமின் நடிப்பு அருமையாக இருந்தது என்றும் அவருக்கு மேலும் ஒரு தேசிய விருது கிடைக்கும் என்றும் அப்படக்குழுவினர் கூறுகின்றனர்.
படப்பிடிப்பின்போது சில காட்சிகளில் அவரது உருக்கமான, ஆவேசமான நடிப்பைக் கண்டு ஒட்டுமொத்த படக்குழுவும் அசந்து போய் கைத்தட்டிப் பாராட்டியதாம்.