திரையரங்குகளில் வசதி இல்லை: சாடும் கதாநாயகி

1 mins read
8a8624bd-f38e-40e9-86f0-480ed56bed27
நிகிலா விமல். - படம்: ஊடகம்

திரையரங்குகளில் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்குப் போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை என்கிறார் நடிகை நிகிலா விமல்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு குடும்பம் திரையரங்குக்கு வந்து படம் பார்க்க ரூ.2,000 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது என்றும் செலுத்திய கட்டணத்துக்குரிய வசதிகள் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஆனால் பல திரையரங்குகள் இந்த விஷயத்தில் மோசமாக உள்ளன. பல திரையரங்குகளில் தொழில்நுட்பக் குறைபாடுகள் காணப்படுகின்றன.

“இதனால் படம் பார்க்க வரும் ரசிகர்கள், இதை நாங்கள் வீட்டிலிருந்து பார்த்து விடுவோமே என வருத்தப்படுகிறார்கள்.

“நான் ஒரு திரையரங்கில் ‘ஜெயிலர்’ திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்திற்கு மேல் திடீரென படத்தின் சத்தத்தை அவர்களாகவே குறைத்துவிட்டனர். அது ஏனென்றே தெரியவில்லை,” என்று குற்றம் சாட்டினார்.

திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போவது திரையுலகத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் குறிப்பிட்ட அவர், திரையுலகத்தினர் இதுகுறித்து ஆலோசித்து நல்ல தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

நிகிலாவின் இந்தப் பேச்சையும் அவரது கருத்தையும் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். சமூக ஊடகங்களில் அவருக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்