தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சர்தார் 2’ இரண்டாம் பாகம் உருவாகும்: கார்த்தி தகவல்

1 mins read
59aacd1a-590f-4618-82de-54199d91d0b4
‘சர்தார்’ படத்தில் கார்த்தி. - படம்: ஊடகம்

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘சர்தார்’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என தெரிவித்துள்ளார் கார்த்தி.

ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்ட பலர் நடித்த ‘சர்தார்’ படம் கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி வெளியீடு கண்டு, நூறு கோடி ரூபாய் வசூல் கண்டது.

இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள கார்த்தி, “மிகப்பெரிய வெற்றிப் படமாக ‘சர்தார்’ வெளியாகி ஓர் ஆண்டாகிறது. இந்த மைல்கல்லை எட்டியதற்காக எனது அன்பான ரசிகர்களுக்கு நன்றி. ‘சர்தார் 2’ விரைவில் ஆரம்பமாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ படம் அடுத்த மாதம் தீபாவளிப் பண்டிகை வேளையில் வெளியாகிறது.

அதன் பின்னர் ‘சர்தார்’, ‘கைதி’ படங்களின் இரண்டாம் பாகங்களில் அவர் கவனம் செலுத்த உள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்