மகாபாரதக் கதையை மூன்று பாகங்களாக உருவாக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. இவர் ஏற்கெனவே இந்தியில் ‘சாக்லேட்’, ‘ஹேட் ஸ்டோரி’, ‘புத்தா இன் டிராபிக் ஜாம்’ உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். எனினும், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம்தான் இவரைப் பிரபலமாக்கியது.
பிரபல கன்னட எழுத்தாளரான எஸ்.எல்.பைரப்பாவின் ‘பர்வா’ (பருவம்) என்ற கன்னட நாவலைத் தழுவி இந்தப் படம் உருவாகிறது.
இந்நிலையில், ‘மகாபாரதம் வரலாறா, புராணமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் விவேக் அக்னிஹோத்ரி. நடிப்பவர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஏற்கெனவே இயக்குநர் ராஜமௌலி மகாபாரதக் கதையை திரைப்படமாக உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளார். எனினும் அதற்கான பணிகளைத் தொடங்க சில ஆண்டுகளாகும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விவேக் அக்னிஹோத்ரி அம்முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


