தெலுங்குப் படம் ஒன்றில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுகிறார் ஷ்ருதி ஹாசன்.
அறிமுக இயக்குநர் சவுரியா என்பவரது இயக்கத்தில் நடிகர் நானியுப் நடிகை மிருணாள் தாகூரும் இணைந்து நடிக்கும் படத்தில் இந்தப் பாடல் இடம்பெறுகிறது.
தந்தை, மகளுக்கு இடையேயான உறவை விவரிக்கும் இந்த உணர்வுபூர்வமான படத்துக்கு ஏசம் அப்துல் இசையமைக்கிறார்.
படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற உள்ள விருந்து நிகழ்வுக்கான பாடல் ஒன்றில் நடனமாடுகிறார் ஷ்ருதி. இதற்காக அவருக்குப் பெருந்தொகை ஊதியமாக வழங்கப்படுகிறதாம்.
இதற்கிடையே, இந்தப் பாடலைப் பாடப்போவதும் ஷ்ருதிதான் என்றொரு தகவல் வெளியாகியுள்ளது. எனினும் படக்குழுவினரோ, ஷ்ருதியோ இதை உறுதி செய்யவில்லை.

