ராஷ்மிகா தனி நாயகியாக நடிக்கும் ‘தி கேர்ள் பிரெண்ட்’

ராஷ்மிகா தனி நாயகியாக நடிக்கும் ‘தி கேர்ள் பிரெண்ட்’

1 mins read
9c0736a4-e346-4492-babf-62d6447979b0
ராஷ்மிகா. - படம்: ஊடகம்

மீண்டும் நாயகியை முன்னிலைப்படுத்தும் படத்தில் நடிக்க உள்ளார் ராஷ்மிகா மந்தனா. படத்துக்கு ‘தி கேர்ள் பிரெண்ட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

பின்னணிப் பாடகி சின்மயி ரவீந்திரனின் கணவர் இயக்கும் படம் இது. இவர் ஏற்கெனவே ‘சில் லா சோ’, ‘மன்மததுடு’ ஆகிய படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்.

இதற்கு முன்பு நாயகியை முன்னிலைப்படுத்தி உருவான ‘ரெயின்போ’ என்ற படத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா. அதன் பிறகு வணிக ரீதியிலான படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இப்போது மீண்டும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதைகளைத் தேர்வு செய்யத் தொடங்கி உள்ளார்.

‘தி கேர்ள் பிரெண்ட்’ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான கையோடு படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏசம் அப்துல் வகாப் இசையமைக்கிறார். இளையர்களைக் கவரும் வகையில் கதை, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

அதனால்தான் இந்தக் கதையில் நடிக்க ராஷ்மிகா எந்தவிதத் தயக்கமும் இன்றி சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், முன்னணி நாயகர்களின் படங்களில் நடிக்கும்போது தனது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட முடியவில்லை என்பதால் தனிநாயகியாக நடிக்க ராஷ்மிகா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்