அண்மைக்காலமாக தமன்னா என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது.
அதிக கவர்ச்சி காட்டுகிறார், பணத்துக்காக மூத்த நடிகர்களுடன் நடிக்கிறார் என்று அவரைப் பற்்றி ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற ஒரு ‘பேஷன்’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தமன்னா அணிந்திருந்த உடை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமன்னாவுடன் இந்தி நடிகை மலைக்கா அரோராவும் பங்கேற்றார். உடலை இறுக்கிப் பிடிக்கும் உடையுடன் இருவரும் மேடையில் ஓய்யாரமாக நடந்தது பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது.
இந்நிலையில், “பேஷன் நிகழ்ச்சி என்பதற்காக உடல் பாகங்களை அப்பட்டமாக காட்டும் வகையிலான உடைகள் அணியலாமா உங்களைப் போன்ற முன்னணி நடிகையே இப்படிச் செய்யலாமா. இது ஆபாசம்,” என்று ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் சாடி உள்ளனர்.
“தமன்னா எல்லை மீறவில்லை,” என்று மற்றொரு தரப்பு அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது.

