கமலுக்கு ஜோடியாகும் நயன்தாரா

1 mins read
c4d0abfa-55ad-4393-9cf0-540c7123a715
நயன்தாரா. - படம்: ஊடகம்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது சங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் கமல். இதையடுத்து வினோத் இயக்கத்திலும் பின்னர் மணிரத்னம் இயக்கத்திலும் நடிக்க முடிவு செய்துள்ளார்.

கமல், மணிரத்னத்துடன் ரெட்ஜெயண்ட் நிறுவனம் கூட்டணி அமைக்கிறது. மேலும், ஏ.ஆர்.ரகுமானும் இணைகிறார். இந்தப் படத்தில் நடிக்க ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட சிலருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இந்நிலையில், இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பெருந்தொகை ஊதியமாக வழங்கப்படுகிறது.

முன்னதாக இப்படத்தில் திரிஷா அல்லது வித்யாபாலன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. எனினும் சில காரணங்களால் அவர்கள் இருவரும் நடிக்கவில்லை.

தமிழ்த் திரையுலகில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ள நயன்தாரா, இதுவரை கமலுடன் இணைந்து நடித்ததில்லை.

அந்தக் குறை மணிரத்னம் படத்தின் மூலம் முடிவுக்கு வர உள்ளது.

குறிப்புச் சொற்கள்