சந்தானம் நடிக்கும் ‘80ஸ் பில்டப்’

சந்தானம் நடிக்கும் ‘80ஸ் பில்டப்’

1 mins read
027e4d1e-e6d3-4cb1-9225-d8e2ee2d7b4e
‘80ஸ் பில்டப்’ படத்தில் சந்தானம், ராதிகா பிரீத்தி, ரெடின் கிங்ஸ்லி. - படம்: ஊடகம்

சந்தானம் நடித்துள்ள புதிய படம் ‘80ஸ் பில்டப்’ விரைவில் திரைகாண உள்ளது.

‘குலேபகாவலி’, ‘ஜாக்பாட்’ ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ராதிகா பிரீத்தி நாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

“முழுநீள நகைச்சுவைப் படமாக இதை உருவாக்கி உள்ளோம். திட்டமிட்டபடியே படப்பிடிப்பைத் தொடங்கி விரைவாக முடித்தோம். படத்தின் அறிமுகக் காணொளியை வெளியிட்டுள்ளோம்.

“1980களில் நடக்கும் கதையை மையமாக வைத்து கதை, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இன்றைய இளையர்களுக்கும் இக்கதை பிடிக்கும்,” என்கிறார் இயக்குநர் கல்யாண்.

அறிமுகக் காணொளிக்காக மொட்டை ராஜேந்திரன் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். நாயகனும் நாயகியும் திருமணக் கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். சந்தானம் ரசிகர்கள் இக்காணொளியைப் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்