கோவா திரைப்பட விழாவில் ‘பொன்னியின் செல்வன்’

கோவா திரைப்பட விழாவில் ‘பொன்னியின் செல்வன்’

1 mins read
1675f8f5-33e4-43b5-8c3f-565e5c72b114
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திரிஷா. - படம்: ஊடகம்

கோவா அனைத்துலகத் திரைப்பட விழாவில் ‘பொன்னியின் செல்வன்’, ‘விடுதலை’ ஆகிய இரு படங்களும் திரையிடப்பட உள்ளன.

இந்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்படுவது வழக்கம்.

இம்முறை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, சம்யுக்த விஜயன் இயக்கிய ‘நீல நிற சூரியன்’, ‘காதல் என்பது பொதுவுடமை’ ஆகிய படங்களும் திரையிடப் படத் தேர்வாகி உள்ளன.

மேலும், திரைப்படங்கள் அல்லாத ஆவணப்படங்கள் பிரிவில் பிரவீன் செல்வம் இயக்கிய ‘நன்செய் நிலம்’ படமும் தேர்வாகி உள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்