தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளியானது துருவ நட்சத்திரம் முன்னோட்டம்

1 mins read
5d01c7f9-0863-4b75-9a9b-c4494ecd5a8d
படம்: - ஊடகம்

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.

படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விநாயகன் வில்லனாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் செவ்வாய்க்கிழமை வெளியானது.

முன்னோட்டத்தில் உள்ள வசனங்களை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.

படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.

இப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்