தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யோகிபாபு மகள் பிறந்தநாள் விழாவில் பிரபலங்கள்

1 mins read
f7df3c7f-4f3f-45d9-8ab5-96bd0ed00d30
யோகிபாபு மகள் பிறந்தநாள் விழாவில் வி‌‌‌ஷால் கலந்துகொண்டார். - படம்: யோகிபாபு/ சமூகஊடகம்

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு.

இவர் ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், யோகிபாபு தன்னுடைய மகளின் முதல் பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.

இதில் விஜய் சேதுபதி, சூர்யா, விஷால், உதயநிதி, ஜெயம் ரவி, கார்த்தி, விஜய் வசந்த் என திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டு யோகிபாபு, பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு விசாகன் என்கிற ஆண் குழந்தை உள்ளது.

கடந்த ஆண்டு இந்த தம்பதிக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு பரணி கார்த்திகா என பெயரிட்டுள்ளார்.

தற்போது யோகிபாபு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்