தீபாவளி பரிசு தந்த ஷங்கர்

1 mins read
6eafdab7-bf1c-4492-8ab0-0f5ac122c09a
படம்: - சமூக ஊடகம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம். அதில் நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘ஜரகண்டி’ பாடல் தீபாவளியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு தகவல் வெளயிட்டுள்ளது.

இதனால் ராம் சரண் ரசிகர்கள் தங்களுக்கு ஷங்கர் தீபாவளி பரிசு தந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்