தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘லியோ படத்தால் திரையரங்குகளுக்கு லாபம் இல்லை’

1 mins read
099b1b74-7470-4cea-9b32-585e2ffa1403
படம்: - ஊடகம்

“பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்களுக்கு ‘லியோ’ படத்தை திரையிடுவதில் விருப்பமே இல்லை” என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளின் வியாபார தொகையில் அளவுக்கு அதிகமாக பங்கீட்டு தொகையை கேட்தால் இந்த நிலை என்று அவர் குறிப்பிட்டார்.

கேரளாவில் இப்படத்தை 60 விழுக்காடுக்கு பங்கீட்டு தொகைக்கு தயாரிப்புக் குழு கொடுத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 80 விழுக்காடுக்கு தந்தது ஏமாற்றமே என்றார் அவர். படத்தின் லாபத்தில் கிடைத்த தொகை பராமரிப்பு செலவுக்கே போததாது என்றார் சுப்ரமணியம்.

தீபாவளி வரை வேறு படம் இல்லை என்பதால் வேறு வழி இல்லாமல் பல திரையரங்குகள் விருப்பமில்லாமல்தான் இப்படத்தைத் திரையிட்டதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்