தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணிரத்னம் - கமல் படத்தின் மேல் விவரங்கள் அறிவிப்பு

1 mins read
dc6aac47-4df5-4afa-988b-d664ec594566
படம்: - சமூக ஊடகம்

இயக்குநர் மணிரத்னமும் கமல்ஹாசனும் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி சேர்ந்துள்ளனர்.

இருவரும் 1987ஆம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முன்னோட்ட காட்சி கமல்ஹாசன் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டுள்ளது.

‘இந்திய சினிமாவின் ஒருங்கிணைந்த சக்திகள், கொண்டாட்டம் தொடங்கட்டும்’ என்று அது பதிவிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது சங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் கமல்.

குறிப்புச் சொற்கள்