பக்கத்து வீட்டில் நகை திருடிய இளம்பெண்

1 mins read
3a4d42c4-979c-43ad-8781-de76c1bbdfd5
படம்: - ஊடகம்

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பூமாதேவி. அவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் தமிழரசி.

தமிழரசியின் மருமகளான சுப்புலட்சுமி (28) அடிக்கடி புதுவண்ணாரப்பேட்டை வருவார்.

கடந்த 20ஆம் தேதி பூமாதேவி வீட்டில் இல்லாத போது சுப்புலட்சுமி வீட்டை திறந்து 10 பவுன் தங்க நகையைத் திருடியுள்ளார்.

வீட்டிற்கு வந்த பூமாதேவி நகை காணாமல் போனதையடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பின்னர் நடத்திய விசாரணையில் சுப்புலட்சுமி திருடியது அம்பலமானது.

பூமாதேவி வீட்டின் ஒரு சாவியை  ஏற்கெனவே திருடி வைத்துக்கொண்ட சுப்புலட்சுமி, பூமாதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருடியுள்ளார்.

சுப்புலட்சுமியிடம் இருந்து நகையை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்