இனிப்புக்கு அடிமையான சிவா; ரகசியம் உடைத்த பிரியங்கா

1 mins read
3ac2bad0-032d-4a20-9ce6-38d178233b11
பிரியங்கா. - படம்: ஊடகம்

நடிகர் சிவகார்த்திகேயன் இனிப்புக்கு அடிமையாகிவிட்டதாகச் சொல்கிறார் பிரியங்கா அருள் மோகன்.

படப்பிடிப்பின்போது ஏதாவது இனிப்பை ருசித்தபடியே இருப்பாராம் சிவா.

இருவரும் ‘டாக்டர்’, ‘டான்’ ஆகிய இரு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்போதுதான் இனிப்பு வகைகளை சிவா எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதை நேரடியாகப் பார்த்தாராம்.

“இனிப்பு சாப்பிடுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று சிவா அடிக்கடி கூறுவார். தாம் சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அருகில் இருக்கும் நம்மையும் இனிப்பு சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார்,” என்று பிரியங்கா கூறியுள்ளார்.

இணையத்தில் வெளியான அவரது பேட்டியைப் படித்த ரசிகர்கள் பலர், இனிப்பு சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும், நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படும் என சிவகார்த்திகேயனுக்குச் சுட்டிக்காட்டி உள்ளனர்.

தற்போது தனுஷ் உடன் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளார் பிரியங்கா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்