மலையாளத்தில் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் அமைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார் இளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷன்.
அவர் தற்போது நடித்து முடித்துள்ள ‘சேஷம் மைக்கில் பாத்திமா’ என்ற மலையாளப் படம் நவம்பர் 3ஆம் தேதி வெளியீடு காண உள்ளது.
“நாள்காட்டியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நவம்பர் மூன்றாம் தேதியிலிருந்து வித்தியாசமான விளையாட்டு துவங்க இருக்கிறது,” என்ற மனதைக் கவரும் அறிவிப்புடன் ஒரு சுவரொட்டியைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்துக்காக ஹேசம் அப்துல் வஹாப் கான் இசையில் உருவான, ‘தட்டற தட்டற’ என்ற பாடலைப் பாடியுள்ளார் அனிருத்.
ஏற்கெனவே கல்யாணி நடிப்பில் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘ஹிருதயம்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அப்துல் வஹாப்.
இவரது இசையில் பாடியது இனிய அனுபவமாக இருந்தது என்கிறார் அனிருத்.
முன்னணி இசையமைப்பாளர் அனிருத் தனது இசையில் பாடியது பெருமை அளிப்பதாக அப்துல் வஹாப் கூறியுள்ளார்.

