கடந்த 1980களில் தொடங்கி சுமார் இருபது ஆண்டுகள் தமிழ்ச் சினிமாவில் மின்னிய பல நட்சத்திரங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் முத்திரை பதிக்கத் தொடங்கி உள்ளனர்.
பல வெள்ளி விழா படங்களில் நடித்துள்ள மோகன் பாடல் காட்சிகளில் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றவர். தற்போது ‘ஹரா’, விஜய் நடிக்கும் படம் என மூன்று படங்களில் நடிக்கிறார்.
வாரிசு நடிகர் என்ற முத்திரையுடன் திரையுலகில் அறிமுகமானாலும் தனித்துவமான நடிப்பாலும் திறமையாலும் சாதித்தவர் கார்த்திக். இப்போது ‘தீ இவன்’ படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். குணச்சித்திர, வில்லன் வேடங்களில் நடிக்கவும் இவர் தயங்குவதில்லை.
முன்பு அடிதடிப் படங்களில் நடித்து அசத்திய அர்ஜுன் இப்போது வில்லனாக நடித்து வருகிறார். பல ஆண்டு காலமாக தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ் ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு பல மொழி இயக்குனர்களும் தேடும் நடிகராக மாறி உள்ளார்.
பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள ராமராஜன் இப்போது ‘சாமானியன்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தின் மூலம் பிரபலமான ரகுமான் ‘துருவங்கள் பதினாறு’ படத்தை அடுத்து மீண்டும் பல மொழிகளில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
ராதிகா, மீனா, ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா ஜெயராம், நதியா உள்ளிட்ட மேலும் பல முன்னாள் நாயகிகள் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்கள்.
“இவர்களில் பலர் ஊதியம், கால்ஷீட் தொடர்பில் நிபந்தனைகள் ஏதும் விதிப்பதில்லை. நல்ல கதாபாத்திரமாக அமைய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
“அதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் இந்தக் கலைஞர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுபோன்ற கலைஞர்களால் திரையுலகம் மேலும் வளர்ச்சி காண்கிறது,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.


