சொன்னதைச் செய்த சிம்பு; உருகும் ரசிகர்கள்

சொன்னதைச் செய்த சிம்பு; உருகும் ரசிகர்கள்

1 mins read
d93932ac-fc65-4227-ae87-ce34dc84c31d
சிம்பு. - படம்: ஊடகம்

உடல் எடையைக் குறைத்து, தோள்பட்டை வரை நீண்ட முடியுடன் காட்சியளிக்கும் புதிய காணொளியை வெளியிட்டுள்ளார் சிம்பு.

அவரது இப்புதிய தோற்றம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிம்பு. இது சரித்திரக் கதையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் படம் என்றும் சிம்பு இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்தப் படத்திற்காக தற்காப்புக் கலைப்பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார் சிம்பு. இதற்காக வெளிநாடு சென்றுள்ளார்.

இந்நிலையில், புதிய தோற்றத்தில் அவர் கம்பீரமாக மனதைக் கவரும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்காக உடல் எடையைக் குறைத்த சிம்பு, அடுத்து ‘பத்து தல’ படத்துக்காக மீண்டும் உடல் எடையைக் கூட்டினார். அப்பட விழாவில்் ரசிகர்கள் முன்னிலையில் பேசியபோது, மிக விரைவில் உடல் எடையைக் குறைப்பேன் என்று தெரிவித்தார்.

அவர் சொன்னபடி செய்துள்ளதாகவும் இதற்காக அவர் கடுமையாக உழைத்திருப்பது தங்களை நெகிழ வைத்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்