‘காஞ்ஜுரிங் கண்ணப்பன்’ என்ற புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் சதீஷ்.
முன்னணி நகைச்சுவை நடிகராக உருவெடுத்த நிலையில், ‘நாய் சேகர்’ படத்தில் நாயகனாக உயர்ந்தார் சதீஷ்.
அப்படம் மாறுபட்ட விமர்சனங்களைப் பெற்றபோதிலும் மீண்டும் ‘வித்தைக்காரன்’ என்ற படத்தில் அவர் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நாயகனாக நடிக்கும் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் ‘காஞ்ஜுரிங் கண்ணப்பன்’ படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“யுவன் சங்கர் ராஜாவின் இசையில் நடிப்பது என்பது அனைத்து நடிகர்களுக்கும் உள்ள கனவு. எனக்கும் அந்தக் கனவு இருந்தது. இப்போது அது நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி. யுவனுக்கு எனது நன்றி,” என்று தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் சதீஷ்.
‘காஞ்ஜுரிங் கண்ணப்பன்’ படத்தை ஏஜிஎஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

