கல்லூரி மாணவர்களுக்கான அரசியலைப் பேசுகிறது ‘ரெபல்’

1 mins read
cb675cee-7605-4bb8-bf64-6434cd2102eb
‘ரெபல்’ படத்தின் சுவரொட்டியில் ஜி.வி.பிரகாஷ். - படம்: ஊடகம்

கல்லூரி மாணவர்களுக்கான அரசியல் குறித்து விவரிக்கும் படைப்பாக உருவாகி உள்ளது ‘ரெபல்’.

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கி உள்ளார்.

நடிகர் சிம்பு வெளியிட்ட இப்படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அதில், ஜிவி பிரகாஷ் பெட்ரோல் குண்டை எறிவது போன்றும் பின்னணியில் கலவரம் நடப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

“கடந்த 1980களில் நடைபெற்ற சில உண்மைச் சம்பவங்களைத் தழுவி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. கல்லூரி மாணவர்களுக்கான அரசியலும் இதில் பேசப்பட்டிருக்கிறது. “ஜி.வி.பிரகாஷின் திரைப் பயணத்தில் இந்தப்படம் முக்கிய திருப்புமுனையாக அமையும்,” என்கிறார் நிகேஷ்.

மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்