‘கூழாங்கல்’ படத்தை வெளியிட்டதை நினைத்துப் பெருமை கொள்வதாகச் சொல்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
இந்தப்படம் இவரது இயக்கத்தில் உருவாகவில்லை. அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ‘ரெளடி பிக்சர்ஸ்’ வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் படம் தங்களுக்குப் பல்வேறு பெருமைகளை ஈட்டித் தந்துள்ளது என நெகிழ்ந்து போகிறார் விக்னேஷ் சிவன்.
கடந்த 27ஆம் தேதி நேரடி யாக ஓடிடி தளத்தில் வெளி யானது ‘கூழாங்கல்’ படம்.
இந்நிலையில், மிக அருமையான படைப்பை திரையரங்கு களில் ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்தார்.
“ரெளடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கிய கையோடு நாங்கள் வெளியிட முடிவு செய்த முதல் படம் ‘கூழாங்கல்’தான்.
“இயக்குநர் ராம் என் குரு போன்றவர். அவர்தான் இந்தப் படம் குறித்து என்னிடம் கூறி னார். படம் பார்த்ததும் எங்களுக்கும் பிடித்திருந்தது. உலகளவில் பல திரைப்பட விருது விழாக் களில் பார்வையாளர்களுக்குத் திரையிட்ட போது அவர்களுடைய மனதையும் கவர்ந்தது.
தொடர்புடைய செய்திகள்
“எங்களுக்கு அதிக பெருமையைத் தேடித் தந்த படம் இது. இந்தியாவின் அதிகாரபூர்வ நுழைவாக எங்களின் முதல் படம் ஆஸ்கருக்கு தேர்வான மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. மேலும் சில விருதுகளுக்கும் இப்படத்தைப் பரிந்துரைத்தனர்.
“கூழாங்கல்’ படத்தின் தயாரிப்பாளர் நான் என்பது பெருமை. இதை உருவாக்கிய இயக்குநர் வினோத்திற்கும், படத்தில் நடித்த கருத்தடையான், செல்லபாண்டி ஆகியோருக்கும் நன்றி,” என்றார் விக்னேஷ் சிவன்.
திரையரங்குகளில் இப் படத்தை வெளியிட வேண்டும் என்று விரும்பினாலும், அதைத் தாண்டி முதலில் பல்வேறு திரைப்பட விருது விழாக்களில் திரையிட விரும்பியதாகக் குறிப்பிட்ட அவர், சில காரணங்களால் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டி இருந்தது என்றார்.
“மிகப்பெரிய இயக்குநர்கள், நடிகர்களின் அறிமுகம் கிடைக்கவும் இந்தப் படம் எங்களுக்கு உதவியது. இதைச் சாத்தியப்படுத்திக் கொடுத்த இயக்குநர் வினோத்திற்கு நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும்,” என்றார் விக்னேஷ் சிவன்.

