வாழ்த்துக் கூறி காதலை உறுதிசெய்த சித்தார்த்

வாழ்த்துக் கூறி காதலை உறுதிசெய்த சித்தார்த்

1 mins read
eef190c5-4747-476d-b136-5b9dd717aba5
சித்தார்த், அதிதி. - படம்: ஊடகம்

நடிகை அதிதி ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம், இருவரும் காதல் வயப்பட்டிருப்பதை உறுதிசெய்துள்ளார் நடிகர் சித்தார்த்.

தமது வாழ்த்துச் செய்தியில் அதிதியை ‘பார்ட்னர்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ள சித்தார்த், அதிதியின் தோளில் தாம் சாய்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் ஆங்கிலத்தில் கவிதை ஒன்றையும் சித்தார்த் எழுதி இருந்தார்.

அவரது இந்தப் பதிவுக்குப் பின்னூட்டமிட்டுள்ள அதிதி, “நீங்கள் இவ்வளவு அழகாக கவிதை எழுதுவீர்கள் என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவின் மூலம் தங்களுக்கு இருந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளதாக ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்