சிறப்பாக நடந்தேறிய உமாபதி, ஐஸ்வர்யா திருமண நிச்சயதார்த்தம்

சிறப்பாக நடந்தேறிய உமாபதி, ஐஸ்வர்யா திருமண நிச்சயதார்த்தம்

1 mins read
a05200f9-8931-4bcb-a8ab-dac08acf8c90
தம்பி ராமையா, அர்ஜுன் குடும்பத்தார். - படம்: ஊடகம்

நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதிக்கும் நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு குடும்பத்தாரும் பங்கேற்ற திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் உள்ள கோவிலில் சிறப்பாக நடந்தேறியது.

நடிகர் விஷால், இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான உமாபதி, அடுத்து, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ‘தண்ணி வண்டி’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். ஐஸ்வர்யாவும் சில படங்களில் நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்