மலையாளத்தில் நடிக்கும் அனுஷ்கா

மலையாளத்தில் நடிக்கும் அனுஷ்கா

1 mins read
8268627a-ad02-4400-b375-436edd9ac52d
அனுஷ்கா. - படம்: ஊடகம்

முதன்முறையாக மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார் நடிகை அனுஷ்கா. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

படத்துக்கு ‘கத்தனார்’ என தலைப்பு வைத்துள்ளனர். சரித்திரக் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது என்றும் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும் படத்தின் இயக்குநர் ரோஜின் தாமஸ் தெரிவித்துள்ளார்.

இவர் ஏற்கெனவே ‘ஹோம்’ என்ற படத்தை இயக்கியவர். அவரது புதுப் படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மலையாள நடிகர் ஜெயசூர்யா.

குறிப்புச் சொற்கள்