‘ஃபிரண்ட்ஸ்’ நடிகர் மேத்தியூ பெரி மரணம்

1 mins read
69ccc7be-6b92-4f9e-b4e9-5d46d2cbde18
பிரபல நடிகர் மேத்தியூ பெரி மறைவு. - படம்: ராய்ட்டர்ஸ்

லாஸ் ஏஞ்சலிஸ்: ‘ஃபிரண்ட்ஸ்’ எனும் பிரபல அமெரிக்க நகைச்சுவைத் தொடரில் நடித்துப் பெயர் பதித்த மேத்தியூ பெரி உயிரிழந்தார்.

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் தனது வீட்டில் மாண்டுகிடந்த அவருக்கு வயது 54.

வீட்டு வெந்நீர் குளியல் தொட்டியில் (ஹாட் டப்) நினைவிழந்த நிலையில் பெரி காணப்பட்டார். அவரை மீட்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பெரி நீரில் முழ்கி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 4.10 மணிக்கு அவரின் வீட்டுக்கு மீட்புப் பணியாளர்கள் சென்றதாக லாஸ் ஏஞசிலீஸ் நகர காவல்துறை கூறியது. அப்போது பெரியின் பெயர் வெளியிடப்படவில்லை. 50களில் இருக்கும் ஓர் ஆணின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்றதாகத் தகவல் வெளியானது

காலத்தால் அழியாத நகைச்சுவை தொலைக்காட்சி நாடகமாகக் கருதப்படும் ‘ஃபிரண்ட்ஸ்’ தொடரில் ‌ஷேண்ட்லர் பிங் எனும் கதாபாத்திரத்தில் அசத்தினார் பெரி. ‘ஃபிரண்ட்ஸ்’ 1994ஆம் ஆண்டிலிருந்து 2004ஆம் ஆண்டுவரை ஒளிபரப்பானது.

புகழின் உச்சியில் இருந்தபோது பெரி, வலியைக் குறைக்கும் மருந்து வகைகள், மதுபானம் ஆகியவற்றுக்கு அடிமையாகி பல முறை மறுவாழ்வு மருந்தகங்களில் உதவி நாடியிருக்கிறார். இதுபோன்ற காரணங்களால் அவருக்கு உடல்நலப் பிரச்சினைகளும் எழுந்தன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்