‘ஜிகர்தண்டா 2’வை வெளியிடும் துல்கர் சல்மான்

1 mins read
f906dd48-deea-42b4-bcf4-ea9a56c785ef
ஜிகர்தண்டா 2 - படம்: ஊடகம்

‘ஜிகர்தண்டா 2’ படத்தைக் கேரளாவில் துல்கர் சல்மான் வெளியிடுகிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வெளிவந்த ‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஏற்கெனவே இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது. தற்போது இந்தப் படத்தை கேரளா மாநிலத்தில் நடிகர் துல்கர் சல்மான் தனது ‘வேவரர் பிலிம்ஸ் நிறுவனம்’ மூலம் தீபாவளிக்கு முன்னதாகவே வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்