தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கேப்டன் மில்லர்’ படத்தில் மூன்று தோற்றத்தில் தனுஷ்

1 mins read
d66785b5-8668-46b9-a93e-27d386e70f53
தனுஷ் - படம்: ஊடகம்.

கேப்டன் மில்லர் படத்தில் மூன்று தோற்றத்தில் தனுஷ் நடித்திருப்பதாக அவருடைய சிகை அலங்கார நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படம் டிசம்பர் 15ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இந்தப் படத்திற்கான வியாபாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷின் சிகை அலங்கார நிபுணர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், “தனுஷ் இத்தனை ஆண்டு சினிமா பயணத்தில் ஒன்றரை வருடம் ஒரு படத்திற்காக நீளமாக முடி வளர்த்தது இல்லை. இந்தப் படத்தின் தோற்றத்திற்காக நிறைய உழைப்பை தந்துள்ளார். மேலும், படத்தில் தனுஷ் மூன்று தோற்றங்களில் நடித்துள்ளார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்,” என தெரிவித்துள்ளார். 

ஹாலிவுட் தரத்தில் ஒரு போர் படத்தை தமிழ் சினிமாவில் எடுக்க முடியுமா என்கிற கேள்விக்கு கேப்டன் வில்லர் திரைப்படம் பதில் சொல்லும் அளவிற்கு அதன் விஷுவல்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்