‘ஜவான்’ படத்திற்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா

1 mins read
d0e62d59-cfa9-4e80-a143-88a5248ecc66
நயன்தாரா - படம்: ஊடகம்.
நயன்தாரா
நயன்தாரா -

‘ஜவான்’ படத்திற்குப் பிறகு நடிகர் கமலுடன் இணைந்து நடிக்க தன்னுடைய சம்பளத்தை யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்த்தி உள்ளார் நயன்தாரா.

கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் இருவரும் இணைந்து பணியாற்றும் வேலைகள் தொடங்கிவிட்டன. கமல்ஹாசனின் 234வது படமாக உருவாக உள்ள அப்படம் பற்றிய அதிகாரபூர்வத் தகவலையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்ந்தெடுத்து விட்டார்கள். ஆனால், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதற்கு சம்மதித்து ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

அது உண்மை என்றால் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகை என்ற பெயரைப் பெறுவார் நயன்தாரா. அதிகபட்சமாக ‘ஜவான்’ படத்தில் நடிக்க ரூ.10 கோடி சம்பளம் பெற்ற நயன்தாரா ‘ஜவான்’ வெற்றிக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்திவிட்டார்.

‘ஜவான்’ படம் மூலம் நயன்தாரா இந்தியிலும் பிரபலமாகிவிட்டதால் கமல்ஹாசனின் படம் பான் இந்தியா படமாக வெளியாக இது உதவும் என்பதும் ஒரு காரணம் என்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்