தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சொகுசு கார் வாங்கிய பூஜா ஹெக்டே

1 mins read
a6082476-48c0-4493-8bfd-e8fade2e1f4a
பூஜை ஹெக்டே - படம்: ஊடகம்.

பூஜா ஹெக்டே ஆடம்பர கார் ஒன்றை வாங்கி இருப்பதாக வலைத்தளங்களில் படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ‘முகமூடி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தற்போது இந்தியில் நடிகர் சாகித் கபூருக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பூஜா ஹெக்டே ரூ.5 கோடி மதிப்பிலான ரேஞ் ரோவர் என்கிற புதிய கார் ஒன்றை வாங்கி, அந்தக் காருடன் நிற்பது போன்ற படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதை அவருடைய ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி