தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடியரசு தினத்தில் ‘தங்கலான்’ படம்

1 mins read
a283ddaf-7335-41b8-9db0-d3a2dde8f399
நடிகர் விக்ரம் - படம்: ஊடகம்.

நடிகர் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் படம் வெளியாகும் நாளை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

‘3டி’ தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ‘தங்கலான்’ படத்தை பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது தங்கலான் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி நவம்பர் 1ஆம் தேதியும் படம் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி குடியரசு தினத்தில் உலகமெங்கும் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். படத்தின் டீசர் வருகிற நவம்பர் 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் தங்கலான் திரைப்படம் வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின வெளியீடாக உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘சீயான் 62’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சித்தா’ படத்தை இயக்கிய அருண்குமார் படத்தை இயக்க, ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி