இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய மனைவியுடன் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபட்டார்.
ஏ.ஆர்.முருகதாஸ் பல படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களைத் தயாரித்தும் வருகிறார்.
அஜித் நடிப்பில் வெளியான ‘தீனாந படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்தின் ‘ரமணா’, சூர்யாவின் ‘கஜினி’, ‘7ஆம் அறிவு’, விஜய்யின் ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’, ரஜினியின் ‘தர்பார்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியானது.
இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் உள்ள பெருமாள் கோவிலில் தன் மனைவியுடன் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வலம் வருகிறது.


