தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டுடன் வலம் வரும் ‘பிக்பாஸ்’ சம்யுக்தா

1 mins read
f96d8dae-8268-45e0-b401-222c91b90b05
சம்யுக்தா. - படம்: ஊடகம்

‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமடைந்த சம்யுக்தா திடீரென ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டுடன் வலம் வருகிறார்.

அடுத்த படத்தில் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்காக அவர் கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் சம்யுக்தா குறித்து ரசிகர்கள் அதிகம் பேசத் தொடங்கினர். எனினும், திரையுலகில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் அமையவில்லை.

விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இன்ஸ்டகிராமில் ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டுடன் காட்சி அளிக்கும் காணொளியை அவர் பகிர்ந்துள்ளார்.

இதற்காக கடந்த சில மாதங்களாக கடும் உடற்பயிற்சி மேற்கொண்டதாகவும் உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியதாகவும் கூறுகிறார் சம்யுக்தா.

அவர் எதற்காக இவ்வாறு மாறியுள்ளார் என்பதற்கான காரணத்தை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்