33 ஆண்டுகளுக்குப் பின்னர் திரையில் இணையும் ரஜினி, அமிதாப்

33 ஆண்டுகளுக்குப் பின்னர் திரையில் இணையும் ரஜினி, அமிதாப்

1 mins read
88802bbf-57e5-407a-9d4f-9ed2f08273e8
படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுடன் ரஜினி. - படம்: ஊடகம்

தனது 170வது படத்துக்கான படப்பிடிப்புக்காக மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் என இடைவிடாமல் பறந்துகொண்டிருக்கிறார் ரஜினி.

அண்மையில் மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பியுள்ளார்.

இந்நிலையில், மும்பை படப்பிடிப்பின்போது ரஜினி, அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி உள்ளனர்.

இருவரும் ஏறக்குறைய 33 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் இணைந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்