காதலித்து திருமணம் செய்வேன்: ஸ்ரீ திவ்யா

1 mins read
d1ec9384-9fff-41e2-af9b-01611e3ee83f
ஸ்ரீ திவ்யா. - படம்: ஊடகம்

காதல் திருமணத்தை ஆதரிப்பதாகச் சொல்கிறார் நடிகை ஸ்ரீ திவ்யா.

அண்மைய பேட்டியில் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

“என்னுடைய முடிவில் மாற்றம் ஏதும் இல்லை. நிச்சயமாக ஒருவரைக் காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்வேன்.

“என்னுடைய காதலர் யார், எப்போது திருமணம் என்று கேள்விகளை அடுக்கினால் அவற்றுக்குத் தற்போது பதில் சொல்ல இயலாது. உரிய நேரம் வரும்போது அனைத்து விவரங்களையும் வெளியிடுவேன்,” என்று ஸ்ரீ திவ்யா தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற படத்தில் அறிமுகமான இவர், பின்னர் ‘காக்கி சட்டை’, ‘ஜீவா’, ‘ஈட்டி’, ‘மருது’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர் எந்தப் படத்திலும் தலைகாட்டவில்லை. இந்நிலையில், விக்ரம் பிரபுவுடன் ‘ரெய்டு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறும் ஸ்ரீ திவ்யாவுக்கு, இரண்டு புதுப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாம்.

குறிப்புச் சொற்கள்