ரவி தேஜாவுடன் இணையும் பிரியங்கா

1 mins read
fa32ab7f-12c0-4edf-9ed7-7d2d17cbb399
பிரியங்கா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

சம்பளப் பிரச்சினை காரணமாக ராஷ்மிகாவிற்குப் போகவேண்டிய படம் பிரியங்காவிற்கு கிடைத்துள்ளது.

பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்குப் படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். தற்போது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்ததாக ஜெயம் ரவியுடனும் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ஜோடியாகவும் நடித்து வருகிறார். இத்துடன் புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் கோபிசந்த் மலினேனி, ரவி தேஜா சேர்ந்து பணியாற்ற இருக்கும் தெலுங்குப் படத்தில் நாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் தேர்வாகியிருக்கிறார்.

கோபிசந்த் மலினேனியுடன் ரவிதேஜா இணையும் நான்காவது படம் இது. இந்தப் படத்தில் நடிக்க முதலில் பேசப்பட்டவர் ராஷ்மிகா. ஆனால் சம்பளப் பிரச்சினையால் ராஷ்மிகாவிற்கு பதில் பிரியங்கா மோகன் தேர்வாகியுள்ளார்.

இவர் அண்மையில் ஆரஞ்சு வண்ண சேலையில் படப்பிடிப்பு செய்து அந்தப் படங்களை வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி