தாய்லாந்தில் படக்குழுவுடன் வெங்கட் பிரபு

தாய்லாந்தில் படக்குழுவுடன் வெங்கட் பிரபு

1 mins read
77f8b564-6c32-4f29-a3c6-499d296938f8
வெங்கட் பிரபு, விஜய் - படம்: ஊடகம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு தாய்லாந்து செல்ல இருக்கிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். ‘தளபதி 68’ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். அண்மையில் இப்படத்தின் பூஜை தொடர்பான காணொளியைப் படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், ‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு நவம்பர் 1ஆம் தேதி பாங்காக் செல்லவுள்ளதாகவும் அங்கு பிரம்மாண்டமாக துரத்திப் பிடிக்கும் காட்சி ஒன்றைப் படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தென்னாப்பிரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி