தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையராஜாவாக மாறப்போகும் தனுஷ்

1 mins read
824b8a4d-d35c-4b43-87b8-6791d379d30c
இளையராஜா, தனுஷ் - படம்: ஊடகம்.

இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1,000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இன்றைய தலைமுறை இளைஞர்கள்கூட இவரது பாடல்களை விரும்பி கேட்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாகவும், இதனை இளையராஜா தயாரிப்பதாவும் அறிவித்தனர். ஆனால், அதன்பிறகு அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் அவரது வேடத்தில் நடிக்கவுள்ளார் என தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு 2024ஆம் ஆண்டு தொடங்குகிறதாம். 2025ஆம் ஆண்டில் இப்படத்தை திரைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளதாகப் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி