ஜூனியர் பாலையா காலமானார்

1 mins read
478f599b-9371-4a0f-a03f-522b94315ad1
ஜூனியர் பாலையா - படம்: ஊடகம்.

திரைப்பட நடிகர் ஜூனியர் பாலையா நேற்று காலமானார்.

ஜூனியர் பாலையாவிற்கு வயது 70. பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா.

இவர் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் ‘கரகாட்டக்காரன்’, ‘கும்கி’, ‘சாட்டை’, ‘சுந்தரகாண்டம்’, ‘வின்னர்’, ‘கோபுரவாசலிலே’ உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்லதொரு பெயரையும் புகழையும் தந்தது.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஜூனியர் பாலைய்யா மூச்சுத்திணறல் காரணமாக நேற்று அதிகாலை உயிரிழந்தார். இவர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள இவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இறுதிச்சடங்கு நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்