‘அன்னபூரணி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

1 mins read
c65d431c-68a5-46d6-8bd3-dc94b4801c6e
நயன்தாரா. - படம்: ஊடகம்.
multi-img1 of 2

நயன்தாரா நடித்திருக்கும் அன்னபூரணி படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகிறது.

நடிகை நயன்தாரா தனது 75வது படமான ‘அன்னபூரணி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஷங்கரின் உதவி இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். ‘ராஜா ராணி’ படத்திற்கு பிறகு நயன்தாரா நடிகர்கள் ஜெய், சத்யராஜுடன் இணைந்து நடிக்கின்றார். கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, கார்த்திக் குமார், ரேணுகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அண்மையில் இந்தப் படத்தின் பெயரை ஒரு காணொளியுடன் அறிவித்தனர். அதில் இடம்பெற்ற காட்சிகள் சர்ச்சையாயின. இப்போது இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என புதிய சுவரொட்டிகளை ஒட்டி அறிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி