வித்தியாசமான கதையில் விதார்த்

1 mins read
41ba0a03-d539-43b9-9038-3d2a6be1425c
ஸ்ரீபிரியங்கா, விதார்த் - படம்: ஊடகம்.

எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்களாக விதார்த்தும் யோகி பாபுவும் நடிக்கிறார்கள்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பின்னணிப் பாடகர் அந்தோணி தாசன் இசை அமைக்கிறார்.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. விரைவில் இப்படத்தின் சுவரொட்டி, முன்னோட்டக் காட்சி ஆகியவற்றை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள். நவம்பர் இறுதியில் படம் வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி